Saturday, December 19, 2009

நான் விழுவேன் என்று

சாதிகள் காதலித்தால்
குடிசைகள் எரியாது
மதங்கள் காதலித்தால்
கோபுரங்கள் சரியாது
தேசங்கள் காதலித்தால்
யுத்தங்கள் தோன்றாது

காதல் செய்வீர்.

~யாரோ சொன்னது

வெந்ததைத் தின்று
வெறுமனே வாழ்ந்து
விதி வந்தால் சாவு

இது தானா வாழ்க்கை ?

~யாரோ கேட்டது

இந்தியா வளமான நாடு தான்
இத்தனை பேர் சுரண்டியும் இன்னும் மிச்சமிருக்கின்றதே !

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா

சிந்தனையைக் கிளர்த்தும் நமது இந்தக் காலத்தில்,சிந்தனையை அதிகம் கிளர்த்துவது, இன்னமும் நாம் சிந்திப்பதே இல்லை என்பதுதான்.

No comments:

Post a Comment